கீழ்க்கண்டவற்றை ஜோக்ஸ் என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் மற்றும் சிரிப்பு வராதவர்கள் http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvUஇந்த இணைப்பில் சென்று தற்காலிகமாக சிரித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உடன்பிறப்பு: 'எல்லாவற்றையும் கேள்வி கேட்கவேண்டும், அப்போதான் சிந்தனை விரிவாகும்' அப்படின்னு பெரியார் சொல்லி இருக்கார். அதனால நிறைய கேள்வி கேட்கணும் தெரிஞ்சுதா?
மகன்: சரிப்பா!! கடல் நீர் ஏன் உப்பு கரிக்குது?
உடன்பிறப்பு: போன ஆட்சியில உப்பு கரிச்சுது. அதனால இப்பவும் உவர்ப்பா இருக்கு.
மகன்: சரி, வானம் ஏன் நீலநிறமா இருக்கு?
உடன்பிறப்பு: போன ஆட்சியில் இப்படித்தான் இருந்துச்சு. அதனால இப்பவும் அப்படித்தான்.
மகன்: ...................
உடன்பிறப்பு: ஏன்டா, கேள்வி அவ்வளவுதானா? கேள்வி கேட்டாதான் அறிவு வளரும்னு சொல்லி இருக்கேன் இல்ல!
மகன்: ஆ! ?$!!?
தலைவர் கடிதத்தை பார்த்துட்டு பிரதமர் பயங்கர டென்சன் ஆயிட்டாரமே!
தமிழக மீனவரை காப்பாற்றுங்கள், அல்லது நோட்டடிக்கிற மிஷின் ஒன்றை அனுப்புங்கள் என்று எழுதியிருந்தாராம்!! அதான்.
தொகுதி எம்.எல்.ஏ செத்து ரெண்டு மாசமாகுது, தொகுதி மக்களெல்லாம் இப்போ போய் அவர் சமாதியில் மாலை போடறாங்களே ஏன்?
ரெண்டு மாசம் கழிச்சு தொகுதிக்கு இப்பதான் இடைத்தேர்தல் அறிவிச்சிருக்காங்க, அதுக்கு நன்றி செலுத்தத்தான்!!!
ஒரு மீடியம் சைஸ் பீட்சா, தமிழ்நாடு - இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒரு குடும்பத்திற்கு ஒருவேளைக்கு ஒரு மீடியம் சைஸ் பீட்சா போதும். ஆனால் தமிழ்நாடு போதாது.
3 comments:
The last one was awesome!
//உடன்பிறப்பு: 'எல்லாவற்றையும் கேள்வி கேட்கவேண்டும், அப்போதான் சிந்தனை விரிவாகும்' அப்படின்னு பெரியார் சொல்லி இருக்கார். அதனால நிறைய கேள்வி கேட்கணும் தெரிஞ்சுதா?//
:)
கேள்வி மட்டும் கேட்கவேண்டுமா ? அதெல்லாம் தனக்குத் தானே எழுதிக் கொடுத்து கேட்பது இல்லையா ?
ஒரு மீடியம் சைஸ் பீட்சா, தமிழ்நாடு - இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒரு குடும்பத்திற்கு ஒருவேளைக்கு ஒரு மீடியம் சைஸ் பீட்சா போதும். ஆனால் தமிழ்நாடு போதாது.
இது கலக்கல்