வலைப்பூக்களில் எழுதிவரும் திமுக ஆதரவு பதிவர்கள் சிலர் தங்கள் கட்சி, மற்றும் பதிவுலக செல்வாக்குகளை பயன்படுத்தி பதிவர் சவுக்கை விடுதலை செய்ய ஆலோசனை செய்து வருவதாக கேள்விப்பட்டபோது மனம் கனத்தது. அவர் விடுதலை ஆகும் மறுநாள் வரை தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருப்பது என்றும் முடிவு செய்துள்ளார்கள் என்று அறிய முடிகிறது.

சீரியஸாக, திமுகவின் அசகாய சூர தீரங்களையும், சாணக்கிய சவுண்டித்தனங்களையும் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விலாவாரியாக வியாக்கியானம் செய்யும் உடன்பிறப்புகள் சவுக்கு கைது விசயத்தில் என்ன சப்பைகட்டுடன் வருவார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் மேலிடுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இவ்வாறு நடைபெற்ற முன்னுதாரணம் இருக்கும்போது திமுக ஆட்சியில் ஏன் இவ்வாறு நடக்கக்கூடாது என்ற மொள்ளமாரித்தனமான வாதத்துடன் ஏதாவது திமுக ஜீவி வரக்கூடும். பிறகு அடுத்த திமுக ஆதரவு பதிவு எழுதும் முன் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் தார்மீகத்தை இந்த புனிதர்களிடம் எதிர்பார்க்க முடியுமா என்ன? தமிழரை கொன்றுவிட்டு தமிழருக்காகவே வாழ்கிறேன் என்று ஒரு சொரனையற்ற பொய்யை திரும்பத்திரும்ப தலைமை ஊளையிடும் போது தரங்கெட்ட அதிகாரிகளிடமும் தறுதலை தொண்டர்களிடமும் அந்த தார்மீகம் இருக்க வாய்ப்பில்லை.

அதிமுக ஆட்சியில் இப்படி ஏதேனும் நடந்தால் கண்டனம் தெரிவிப்போமா? இல்லை. ஏன்? ஏனெனில் அதில் பிரயோஜனம் இல்லை. அவர்கள் கோழைகள். கேள்விகளை கண்டு அஞ்சுபவர்கள். அடியாட்கள் மூலம் பதில் சொல்லிவிட்டு அடுத்தடுத்து அதையே செய்வார்கள். அவர்களுக்கு ஓட்டுபோடும் அடிமுட்டாள்களுக்கும் அது தெரியும். அதனால் அதிமுக தலைமை அதை வெளிப்படையாகவே செய்யும். இப்போது மட்டும் ஏன் கண்டனம் தெரிவிக்கவேண்டும்? பயன் உண்டா? நிச்சயமாக இல்லை. இவர்களும் வேறானவர்கள் இல்லை. பதிலளிக்க பயப்படுவார்கள். அல்லக்கைகளை ஏவுவார்கள். ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கு தெரியாது. திமுக அதிமுக போல அராஜக கட்சி அல்ல என்றே அப்பாவியாக கருதும் கூட்டத்தினர்கள் இவர்கள். பல்வேறு வேடங்களில் நாள்தோறும் கூத்துகட்டும் திமுக தலைமை தொடர்ந்து அவ்வாறு நடித்துவருகிறது. அதன் முகத்திரையை கிழிக்க இந்த கண்டனங்கள் அவசியமாகின்றன.பதிவுகளில் வைத்து இவர்களை டவுசர் அவிழ்த்தால் அதன் பிறகாவது யோசிப்பார்களா என்றால், நிச்சயம் இல்லை. உடுக்கை இழந்தவன் கை மறைக்கவேண்டிய இடத்தை மறைக்காமல் முகத்தை மறைத்துக்கொண்டு தொடர்ந்து அம்மணமாகவே தொடரக்கூடும். ஒருவேளை அதுகள் யோசிக்கவும் கூடும். நம் கடன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு கூடவே வைது வைப்போம். தற்போதைக்கு நம் கடமையை செய்துவிட்டு நம் காலத்திற்கு காத்திருப்போம்.

14 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

உடன்பிறப்புகள் சப்பைக்கட்டுகள்...

ஒரிஜினல் "மனிதன்" said...

வாகான இடத்துல உக்காந்துக்கிட்டு
வக்கணையா பேசுறது பதிவுலக பொரட்சியாளய்ங்களுக்கு மட்டுமே கை வந்த கலை போல.

இதத்தான் எங்கூருல சைசா சொல்லுவாய்ங்க,

"புடுக்கு படாம புள்ள பெக்குறதுன்னு"

இந்த மாதிரியான உடான் கலைய உங்ககிட்டதான்யா கத்துக்கிறனும்.

கோவி.கண்ணன் said...

எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெ & கோவைப் போல கருணாநிதி & கோ வும் கோயபல்ஸுகள் தான்.

கோவி.கண்ணன் said...

தமிழன் எந்தக் கட்சி விசுவாசியாக இருந்தாலும் அவன் ஆதரிக்கும் கட்சிக்கு நன்றி உள்ள நாய் தான் என்பதை உபி.கள் என்றோ நிருபனம் செய்துவிட்டார்கள்.

Anonymous said...

நேற்று சவுக்கு விடுதலை என்று ஒரு இணையத்தில் படித்தேன் (i think thatstamil??)...

Anonymous said...

எழுத்தர் மற்றும் பதிவர் சவுக்கு சங்கர் விடுதலை .
Saturday, 24 July 2010 04:46

http://www.dinaithal.com/tamilnadu/15474-2010-07-24-04-52-21

செந்தழல் ரவி said...

வெல்கம் பேக் ராசா.

ஜெயலலிதா h\o சசிகலா said...

மிஸ்டர்.கோவி.கண்ணன்,

என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க? மிஸ்ட்டர்.மோகன் நொந்தசாமி நம்ம இயக்கத்தையும் சந்தடி சாக்கிலே திட்டுகிட்டு இருக்கார். கண்டுக்காம இருக்கீங்க. அப்புறம் சச்பென்ட் செஞ்சுடுவேன். ஜாக்ரதை!

மோகன் கந்தசாமி said...

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட அகரமுதலியில் 'உடன்பிறப்பு' என்பதற்கு சொற்பொருள் 'அடிவருடிகள்;அல்லக்கைகள்;துதிபாடிகள்;ஆமாம்சாமிகள்;சப்பைக்கட்டு பேர்வழிகள்;அடியாட்கள்' என்று விளக்கப்பட்டுள்ளது.

சிக்காகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட அகரமுதலியில் 'உடன்பிறப்பு - 'டபுள் டக்கர் பார்ட்டிகள்;ரெட்டை நாக்கு பசங்க;மூளையை லீசுக்கு விடுபவர்கள்' என்று பொருள் படுத்தப்பட்டுள்ளது.

எனவே உங்கள் விளக்கம் சரிதான் மிஸ்டர் கே.ஆர்.பி.செந்தில்
நன்றிகள்

மோகன் கந்தசாமி said...

///ஒரிஜினல் "மனிதன்" said...வாகான இடத்துல உக்காந்துக்கிட்டு
வக்கணையா பேசுறது பதிவுலக பொரட்சியாளய்ங்களுக்கு மட்டுமே கை வந்த கலை போல.///

டூப்ளிகேட் மிருகம் சார், படித்தவுடன் நீங்கள் நாண்டுகிட்டு சாகும் படிக்கு ஒரு பின்னூட்டமும், உங்களை பாராட்டி ஒரு பின்னூட்டமும் எழுதி தயாராகி வைத்துள்ளேன். உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால் 'கைதுக்கு கண்டனம்' என்று ஒரு வரி பின்னூட்டம் போடுங்கள் பார்ப்போம். பிறகு இரண்டில் ஒரு பின்னூட்டத்தை வெளியிடுகிறேன்.

நான் வாகான இடத்தில் இருக்கிறேன் என்றால் நீங்கள் என்ன முள் கிரீடம் சூட்டி தணல் மேல் ஜீவிக்கிறீரா?
கண்டனம் என்று ஒருவார்த்தை கூற இவ்வளவு அலப்பறையா? மிசாவில் உள்ளபோய் மூத்திரப்பை கிழிந்தும் தொடர்ந்து தொண்டு செய்பவர் போல் இங்கே ஸீன் போடுகிறீர். ..ஸ்ஸப்பா... வாரத்திற்கு ஒருவாட்டியாவது யோசிங்க அப்பு..

மோகன் கந்தசாமி said...

//எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெ & கோவைப் போல கருணாநிதி & கோ வும் கோயபல்ஸுகள் தான்.//
நன்றிகள் கோவிகண்ணன், கொடுங்கோலர்களுக்கு ஊடடம் அவர்களை ஆதரிக்கும் கூட்டத்திலிருந்துதான் பெறப்படுகிறது என்று அவர்கள் அறியும் நாள் என்றோ, நாம் அறியோம் நண்பரே!! மீண்டும் நன்றிகள். பிறகு நலமா??

மோகன் கந்தசாமி said...

//நேற்று சவுக்கு விடுதலை என்று ஒரு இணையத்தில் படித்தேன் (i think thatstamil??)...///

பதிவர் சவுக்குக்கு வாழ்த்துக்கள், சொந்த தலைமைக்கு தலைமைக்கு எதிராகவே போராடி சகபதிவரின் எழுத்துரிமையை மீட்டெடுத்த கழகக் கண்மணிகளுக்கு நன்றிகள்.!!!

மோகன் கந்தசாமி said...

///வெல்கம் பேக் ராசா.///
வந்துட்டோம் மாமே!!!

ரோஸ்விக் said...

இதுவும் சவுக்கடி... :-)

Subscribe to: Post Comments (Atom)