தலைவரே! நீங்கள் சாகும்முன்

Posted by மோகன் கந்தசாமி on Friday, May 20, 2011

திமுக -வின் மாஜி அனுதாபியாக சிலவற்றை கூற விரும்புகிறேன் தலைவரே. மற்றெந்த தேர்தல் தோல்வியையும் விட உமக்கு இது மிக நோயுறு வேதனையைத் தந்துவிட்டதாய் தோன்றுகிறதெனக்கு. எனக்கு உங்கள் மீது எள்ளளவும் அக்கறை கிடையாது. ஆனால் திமுக மீது எப்போதும் உண்டு.

2001 சட்டமன்ற தேர்தல் தோல்வியின்போது ஆதரவாளர்களும் எதிரிகளும் ஒருங்கே கேலி செய்தனரே, நினைவிருக்கிறதா? எதிரிகள் இனி திமுக எழாது என்றனர், நண்பர்கள் கலைஞருக்கு வெற்றி சலித்துவிட்டது;இனி போராட மாட்டார் என்றனர். இப்போது அவர்கள் கூற்று நிஜமாகப் போகிறது. திமுகவை தனிமனிதனாகத் தழைக்கச்செய்தவர் நீங்கள். நிழல் தரு மரத்தடியினின்று நாங்கள் விரட்டப்பட்டு உறவினரும் அல்லக்கைகளும் ஆக்கிரமித்துக் கொண்டபோதும் சிறு பொருமலோடு சகித்துக்கொண்டோம். இன்றோ அவர்கள் மரத்திலேறி கவை கவையாய் கழிக்கும் போது வெறியேற்படுகின்றதய்யா! தருணம் பார்த்து அயலான் வேறு வேரறுக்கத் துணிந்துவிட்டான்.உங்கள் ஆளுகையின் கீழ் உங்கள் உறவினர்கள் இல்லை என்றபோதும் எமக்கு கவலை ஏற்படவில்லை. உம்மை ஏக வசனத்தில் உம்மக்கள் ஏசுவதும், உம் பேச்சை ஏளனத்துடன் அவர்கள் உதாசீனப் படுத்துவதும் அறிவாலய கிசு கிசு என்று நிராகரிக்க முடியாது. அது முற்றுண்மையாக இருக்கவே வாய்ப்பதிகம். உமக்கு தெரியாமல் நடக்கும் அல்லது நடந்த பின் தெரியவரும் தவறுகள் மலிந்துவிட்டன திமுகவில். இவற்றை களைய உம்மால் நிச்சயம் முடியாது. அவை களையப்படாமல் திமுக காலத்தை ஒட்டிவிட முடியும்; ஆனால் அது முன்னாள் காதலியை வேசியாக தெருவில் பார்க்கும் உணர்வைத்தான் தரக்கூடும்.

எதிரியுடன் கள்ள பேரம் ஏதுமின்றி நம் இனத்தை காட்டி கொடுக்கத் துணிந்திருக்க மாட்டீர்கள். உம்மை வைத்து அவன் நம் இனத்தை அழித்துவிட்டு இன்று உம்மையும் சீண்டுகிறான். நீங்கள் முற்றாக ஏமாந்துவிட்டீர்கள். நேற்று பெய்த மூத்திரத்தில் இன்று முளைத்த கள்ளிச் செடி திமுகவிற்கு ஆட்டம் காட்டுகிறது. இதெல்லாம் உமக்கு தேவையா என்பதை விட திமுக -விற்கு தேவையா என்று மல்லாந்து படுத்து மனசாட்சியை கேட்டுப்பாருங்கள், நிச்சயம் மார்மேலே காறித் துப்பிக்கொள்வீர்கள்.

இனி நான் சொல்வதை கேளுங்கள். உங்கள் மகளை சிறிது காலத்திற்கு மறந்து விடுங்கள். திமுகவை எங்களிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் ஓரம் கட்டுங்கள். காங்கிரஸ் கதறக் கதறக் கருவறுக்கப் படுவதை கண்டு ரசியுங்கள். தமிழகத்திலிருந்து விரட்டிச் சென்று டெல்லியில் பொய் அதற்கு சமாதி கட்டுகிறோம். திமுகவின் குருதியை சுத்திகரித்து வீறுகொண்டு எழச்செய்கிறோம். நீங்கள் மழுங்கடித்த தமிழுனர்வை நாங்கள் முனைப்பாக்கித் தருகிறோம். குறுநில மன்னர்களை அடக்கி வழிக்கு கொண்டுவருகிறோம். இறுதியில் உங்கள் அருமை மகளை நாங்கள் மீட்டுத்தரும்போது ஒரு தந்தையாக, தாத்தாவாக அமைதியாக காலத்தை கடத்தலாம்.

யோசிப்பீர்களா?!

5 comments:

குடுகுடுப்பை said...

திமுக தலைமையை வைகோவிடம் கொடுக்கவேண்டும்.அப்போதுதான் திமுக திமுகவாக மீண்டெழும்.

Anonymous said...

மோகன் கந்தசாமி போன்ற திராவிட தமிழ் சொறி நாய்களால் தான் இப்படி கேவலமாக எழுத முடியும்.குறு நில மன்னர்களை அடக்கும் மூஞ்சியைப் பார்;கூவம் பன்றி மாதிரியே இருக்கிறது.

ஆளவந்தான் said...

பாஸ், தயவு செஞ்சு கமெண்ட் மாடரேஷன் போடுங்க

ஆளவந்தான் said...

//
உங்கள் மகளை சிறிது காலத்திற்கு மறந்து விடுங்கள்.
//
நடக்கிற மாதிரி எதாவது பேசுங்க... கனி இன்னும் கட்சி பத்வியை இன்னும் கை விடல..


// திமுகவை எங்களிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் ஓரம் கட்டுங்கள்.
//
யாருகிட்டேனு தெளிவா சொல்லுங்க.. ரெண்டுல ஒரு ஆளை தலிவரா போட்டா இதயத்துல ரத்தமா வடியும் .. #பிள்ளைபாசம்


//
காங்கிரஸ் கதறக் கதறக் கருவறுக்கப் படுவதை கண்டு ரசியுங்கள்.
//
அதைத்தான் சீமான் திறம்பட செஞ்சு நிரூபிச்சுட்டாரே.. செத்த பாம்பை நீங்க அடிச்சு என்ன பண்ண போறீங்க..

மூணு வாரத்துக்கு மூச்சு முட்டுது.. இன்னும் மூனு வருஷம் இருக்கு..

பாலா said...

எப்புடி பாஸ் இவ்வளவு சீரியஸா ............காமிடி பண்ணுறீங்க !!???

Subscribe to: Post Comments (Atom)