நேரு எழுதிய இராமாயணம்

Posted by மோகன் கந்தசாமி on Tuesday, May 26, 2009

திராவிட ஆரியப் போரின் மொத்தம் தான் இராமாயணம் என்று ஆசிய ஜோதி ஜவகர்லால் நேரு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதெல்லாம் நமக்கு முன்னமே தெரியும் என்றாலும் இதற்கு நம் முதல்வர் கொடுத்துள்ள விளக்க உரையின் அரும் சொல் பொருள் விளக்கமே இப்பதிவு.

பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தில்லியை தலைநகராகக் கொண்டு பாரத கண்டத்தை ஆண்டுவந்த சூரிய வம்சத்து அரசன் தனது மூத்த மகனுக்கு பட்டமளிப்பு விழா நடத்த முடிவெடுத்தான். எதிர்பாராத விதமாக தில்லிக்கு வெகு தெற்கே வாழ்ந்து வந்த சூத்திரர்களுக்கு எதிரான புனிதப் போரில் பட்டத்து இளவரசிற்கு அகால மரணம் ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் இளவரசி மகுடம் சூட்டி விழா எடுத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தார்.

பக்கத்து நாட்டு மன்னர்களிடையே கோல் மூட்டுவது, வல்லரசுகளிடம் சென்று இராப்பிச்சை எடுத்து பொருள் சேர்ப்பது போன்றவற்றை கவனிக்க வெளிவிவகாரத்துறை ஒன்றை முதலில் அமைத்தார் பட்டத்தரசி. இளிச்சவாயனைப் போட்டு நொக்குவது, பெரியண்ணன்களைப் பார்த்து பம்முவது போன்றவற்றிற்காக பாதுகாப்புத் துறை ஒன்றை நிறுவிட முடிவு செய்தார். இதர துறைகளை கவனிக்க மற்ற அல்லக்கைகளை நியமித்த கையேடு தமக்கு வெகுகாலமாக கப்பம் கட்டிவரும் திராவிட மன்னர்களுக்கு சில துறைகளை தரவும் முடிவெடுத்தார். ஆனால் சூத்திரர்களுக்கு பதவி கொடுப்பதா என்று ஆங்காங்கே சனாதனிகளிடம் சலசலப்பும் ஏற்பட்டது.

இதற்கிடையே, திராவிட தேசத்தில் கவுரவமாக சூத்திரர்களுக்கு **தடித்துக் கொண்டிருந்த ஆரியக் குரங்கு ஒன்று தலைநகருக்கு ஒரே தாவாக தாவிச்சென்று அரண்மனை வாயிலில் டேரா போட்டது. சூத்திரனுக்கு பதவி கூடாதென தனது பஞ்சகட்சத்தை அவிழ்த்துப் போட்டு அம்மணத்துடன் ஆட்டம் காட்டியது. இதைப் பார்த்த மற்ற சனாதனக் குரங்குகள் எல்லாம் சேர்ந்து தாமும் அந்த அம்மண ஆட்டத்தில் கலந்து கொண்டன. இறுதியில் மகாராணி தம் அடிமைகளுக்கு பதவிகள் கொடுத்தாரா இல்லையா என்ற விஷயத்தை நம் ஆசிய ஜோதி சொல்லாமலே விட்டுவிட்டார். இதுதான் நம் மனிதருள் மாணிக்கம் எழுதிய இராமாயணம்.

இது என்ன இராமாயணமா, இல்லை கப்ஸாயணமா என்று கேட்பவர்களெல்லாம் பார்ப்பன அடிவருடிகளாவர். பன்னெடுங்காலமாக நடந்து வரும் திராவிட ஒடுக்குமுறைகளுக்கு துணை போகக்கூடியவர்களாவர். நம் முதல்வரின் வாரிசுகளை பதவி ஏற்க விடாமல் தடுக்கும் பார்ப்பனர்கள் எல்லாம் நேருவின் இராமாயணத்தில் வரும் ஆரியக் குரங்குகளின் எச்சங்களே! ஆகவே இந்த எச்சங்களிடமிருந்து நம் எச்சிகளை காக்க வேண்டியது நம்மைப் போன்ற எச்சக்களைகளின் கடமையாகும் என்பதை நாம் உணரவேண்டும்.

நம் தலைவருக்கு ராமாயணத்தை எடுத்துச்சொன்னவர்கள்தான் நமக்கும் சொன்னார்கள். ஆனால் நம் இனத்தலைவரின் வாரிசுகளுக்கு எதிரான சதியை பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தீட்டிய பார்ப்பனர்களின் துர்குனத்தை நம் தலைவர்தானே நமக்கு விளக்கிச்சொன்னார். அடுத்தடுத்த எபிசோடுகளில் டி. ஆர். பாலுவுக்கு எதிரான சதிபற்றி மகாத்மா காந்தி எழுதிய இராமாயணத்தையும், ராவணன் மற்றும் சேதுக் கால்வாய் பற்றி ராஜாஜி எழுதிய இராமாயணத்தையும் நம் தமிழினத்தலைவர் நமக்கு அறிமுகப் படுத்துவார் என்று நம்புவோமாக!

இணைப்பு: தலைவர் அறிக்கை

5 comments:

கோவி.கண்ணன் said...

:)

ம் மூக்கறுக்கப்பட்ட சூர்பனகை யாரு ?

கோவி.கண்ணன் said...

//"நேரு எழுதிய இராமாயணம்"//

"நேரு மாமா எழுதிய இராமாயணம்" - என்றிருக்க வேண்டும், இல்லாவிடில் இளங்கோவன் கோவிச்சிப்பார்

மோகன் கந்தசாமி said...

/////ம் மூக்கறுக்கப்பட்ட சூர்பனகை யாரு ?////

ஆஹா! இது ஒரு நல்ல கேள்வி. அவர் குரங்கை டெல்லிக்கு அனுப்பி விட்டு சயனத்தில் இருக்கிறார் போலிருக்கு!

மோகன் கந்தசாமி said...

////இல்லாவிடில் இளங்கோவன் கோவிச்சிப்பார்///

என்ன கோவி இது!!?? அண்டிப்பிழைப்பவர்களுக்கு கோபம் ஒரு கேடா!!

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

Subscribe to: Post Comments (Atom)